*
இது
(தருமி) எனது பெயரன் விவியனின் பதிவு. அவனது இப்போதைய வயது 8. எப்போதும் படம் எடுக்கும் என்னோடு ஒட்டிக் கொண்டிருப்பான் - அதுவும் காமிராவுக்குப் பின்னால் நிற்கத்தான் அவனுக்குப் பிடிக்கும். அதுவும் டிஜிட்டல் வந்தாலும் வந்தது. அதன் பிறகு ஒவ்வொரு படத்தின் ரிசல்ட்டையும் தெரிந்து கொள்ள நல்ல ஆவல். அதோடு என் காமிராவை அவன் பிடுங்க ஆரம்பித்ததும், என்னிடம் தூங்கிக்கொண்டிருந்த Olympus digital camera (Camedia 2.1 mp)-வைத் தூக்கிக் கொடுத்து விட்டேன்.
தலைவர் அதன் பிறகு அடிக்கடி காமிராவுடன் அலைய ஆரம்பித்து விட்டார்.
அவனது ஆசை இப்போது அந்தப் படங்களை பதிவில் இட வேண்டுமென்று. அதனால் பிறந்தது இந்த இடுகை.
உங்கள் வாழ்த்துக்களும், உதவிகளும், பாராட்டுகளும் அவனுக்கு மிக உதவியாக இருக்கும்.
வளர, வாழ்த்தி ஆரம்பித்து வைத்துள்ளேன்.
.........
தருமி
*